2-photo_050616082534

பிளாஸ்டிக் அரிசி கலப்படம் பற்றி பரவலாக தகவல்கள் பரவி வரும் நிலையில், அதனை நேரில் பார்த்ததாக இதுவரை யாரும் முன்வரவில்லை. பிளாஸ்டிக் அரிசி இருப்பது உண்மை என கூறுபவர்கள், சமூக பொறுப்புமிக்க நபர்கள் மூலம் தகுந்த விளக்கம் தர முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஆந்திரம், தெலங்கானா மாநிலங் களில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக கடந்த 7-ம் தேதி தகவல் வெளியானது. இந்நிலையில், சென்னை அயனாவரம் அரசு போக்கு வரத்து பணிமனை உணவகத்தில் பிளாஸ் டிக் அரிசியை சமைத்து சாப்பாடு விநி யோகம் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பணிமனை உணவகத்தில் இருந்த அரிசி மூட்டைகளை சோதனை யிட்டதில் அங்கு பிளாஸ்டிக் அரிசி இருப்பதற்கான அறிகுறிகள் கூட கிடைக்கவில்லை. தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையிலும், பிளாஸ்டிக் அரிசி எங்குமே கண்டுபிடிக் கப்படவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், “தமிழகத்தில் எந்தவொரு இடத்திலும் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படவில்லை. இது தொடர்பாக தேவையற்ற வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் அரிசி குறித்து பரவி வரும் கருத்துகள் தொடர்பாக தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் டி.துளசிங்கம் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “பிளாஸ்டிக் என்பது உருகும் தன்மை கொண்ட பொருள். அதை சமைக்க இயலாது. மனித உடலில் பிளாஸ்டிக்கை செரிமானம் செய்வதற்கு எவ்வித அமிலமும் சுரப்பதில்லை. எனவே, பிளாஸ்டிக்கை சாப்பிடுவது என்பது சாத்தியமற்ற செயல். மேலும், இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு கிலோ பிளாஸ்டிக் ரூ.83-க்கு விற்கப்படுகிறது. அரிசியைவிட அதிக விலையுள்ள பிளாஸ்டிக்கை அரிசியுடன் கலந்தால் வியாபாரிகளுக்கு நஷ்டமே ஏற்படும். ஆகவே பிளாஸ்டிக் அரிசி என்பது வெறும் கற்பனையே” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே தென்னிந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் அரிசிக்கு மாற்றாக கோதுமையின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்வதற்கான சதிச் செயல்தான் இது என்ற ஒரு கருத்தும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த சூழலில், “பிளாஸ்டிக் அரிசியை நேரில் பார்த்ததாக இதுவரை யாருமே கூற முன்வரவில்லை. இதன் காரண மாக பிளாஸ்டிக் அரிசி கலப்படம் என்பது வெறும் வதந்தியே என்ற கருத்து வலுவடைந்து வருகிறது. ஒருவேளை பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப் படுவது உண்மைதான் என யாரேனும் கூறினால், சமூகப் பொறுப்புள்ள நபர்கள் மூலம் அது பற்றி முறையாக விளக்கம் அளிக்க வேண்டும். அவ்வாறு யாருமே முன்வராத நிலையில், பிளாஸ் டிக் அரிசி பற்றி பரப்பப்படும் வதந்திக ளுக்கு மக்கள் முக்கியத் துவம் தரக்கூடாது” என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Comments

comments