NT_20170605172034348669

எழில் இயக்கத்தில் நடித்த ‘சரவணன் இருக்க பயமேன்’ படம் தன்னை பி அண்ட் சி மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்ற எண்ணத்தில் இறங்கி நடித்தார் உதயநிதி. ஆனால் அந்தப் படம் அவருக்கு கமர்ஷியலாக கைகொடுக்கவில்லை. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ‘இப்படை வெல்லும்’.

சிகரம் தொடு படத்தை இயக்கிய கௌரவ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்துடன் தளபதி இயக்கத்தில் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் உதயநிதி. இந்தப் படத்தை அடுத்து பிரபல இயக்குனர் ப்ரியதர்சன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். தமிழில் ‘கோபுர வாசலிலே’, ‘லேசா லேசா’, ‘காஞ்சிவரம்’ ஆகிய படங்களை இயக்கிய ப்ரியதர்சன் தேசிய விருது உட்பட பல விருதுகளை பெற்றவர். அசோக் செல்வன், பிரகாஷ் ராஜ் ஆகியோரை வைத்து ‘சில சமயங்களில்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படம் பிசினஸ் ஆகாமல் வருடக்கணக்கில் முடங்கிக் கிடக்கிறது.இந்நிலையில்தான், ப்ரியதர்சன் இயக்கத்தில் நடிக்கிறார் உதயநிதி. இந்த படத்தை ‘மூன்ஷாட் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் சந்தோஷ் தயாரிக்கிறார். இயக்குநர் ப்ரியதர்சனும், உதயநிதியும் முதன் முதலாக இணையும் இந்த படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகிறது.

Comments

comments