0

பாகுபலி-2 படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை செய்துவருவது ஒருபக்கம் இருக்கட்டும்.. படத்தின் உள்ளே போர்முறைகள், ஆயுதங்களை கையாளுதல் என ஒவ்வொன்றிலும் புதுப்புது யுக்திகளை கையாண்டு பிரமிக்க வைத்திருந்தார்கள்.. அதிலும் குறிப்பாக ஒரே வில்லில் இரண்டு அம்புகளை விட அனுஷ்கா முயற்சி செய்வார். ஆனால் ஒரு சண்டைக்காட்சியின்போது ஒரே வில்லில் மூன்று அம்புகளை தொடுத்து அனுஷ்காவை மட்டுமல்ல, ரசிகர்களையும் வாய்பிளக்க வைத்தார் பிரபாஸ்.

ஆனால் இந்த சாதனையை சில வருடங்களுக்கு முன்பே கோச்சடையான் படத்தில் ரஜினி செய்துவிட்டார் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. இதை ரஜினி ரசிகர் ஒருவர் கண்டுபிடித்து ரஜினியின் மகளும் கோச்சடையான் பட இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிக்கு ட்வீட் செய்திருக்கிறார்.. அதற்கு ‘உண்மை தான்’ என சௌந்தர்யாவும் பதில் அளித்துள்ளார்.

Comments

comments