கவலையே இல்லாத மனுஷன்னு இன்னைக்கு யாருமே கிடையாது. எல்லோருக்குமே ஏதோ ஒருவிதத்துல கவலை இருந்துக்கிட்டுத்தான் இருக்கு. சின்னக்குழந்தைக்கு, அப்பா தினமும் ‘கிண்டர் ஜாய்’ வாங்கி தரலையேனு கவலை. மனைவிக்கு `நாம என்ன சொன்னாலும்,  நம்ம வீட்டுக்காரர்  அவர் இஷ்டப்படிதானே செய்றார்’னு கவலை. கணவனுக்கு வருமானத்தைப் பெருக்கணுமேங்கிற கவலை. டிகிரி முடிச்சுட்டு வேலைக்குக் காத்திருக்கிற அண்ணனுக்கு, `மனசுக்குப் பிடிச்ச மாதிரி வேலை கிடைக்கலையே’னு கவலை.

Friends__17295

எஸ்.எஸ்.எல்.சி முடிச்சு ப்ளஸ்-டூ வந்து விட்டால் போதும். டென்ஷன் தானா வந்து ஒட்டிக்கும்.  சிலர் ‘மச்சான் செம மூட் அவுட் மச்சான்’னு தொட்டதுக்கெல்லாம் மூட் அவுட் ஆயிடுவாங்க. அதிலும்குறிப்பா நாலுபேர் சேர்ந்து உட்கார்ந்து பேச ஆரம்பிச்சிட்டாங்கன்னா ரெண்டு பேர் சேர்ந்து நாலாவது ஆளை கலாய்ப்பாங்க. மூணாவது ஆள் சிரிச்சுக்கிட்டு இருப்பார். நாலாவது ஆளுக்கு ‘மூட் அவுட்’ ஆகிடும். அதுவும் சின்னச்சின்ன விஷயத்துக்கெல்லாம் அவன் மூட் அவுட் ஆகிறான்னு தெரிஞ்சா போதும், ரொம்பவே கிண்டல் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. சரி, இந்த மாதிரி பிரச்னைக்கு என்ன பண்றது?

பொதுவாகவே, ‘யங்ஸ்டர்ஸ்’ யாரும் திட்டமிட்டு அவமானப்படுத்துறது இல்லை. சிலசமயம் வார்த்தைகள் அப்படி வந்து விழுந்துடும். கிண்டல், கேலிகள் பண்ணும்போது அவங்களோட ‘ஷாஃப்ட் கார்னரை’ கிண்டல் பண்ணிணோம்னா அவங்களுக்குக் கோபம் வராது. அவங்களோட வீக்னஸை கிண்டல் பண்ணினால் கோபம் வரும்.

உதாரணமாக சினிமா, பீச், கேளிக்கை விருந்துகளுக்கு வருவதை ஒரு நண்பன் தவிர்க்கிறான்னா, ‘அவனை சரியான சாமியார்டா’னு சொன்னா நண்பர் கோபித்துக்கொள்ள மாட்டார். அதே நண்பனை, ‘நீ சரியான கஞ்சன்’னு சொல்லிக் கேலி பேசினீங்கன்னா அவனுக்குக் கோபம் வரும். அதுக்கப்புறம் அந்த நண்பன் அந்த நட்பு வட்டத்தை காலப்போக்கில் தவிர்க்க ஆரம்பிச்சிடுவான்.

கேலிப் பேச்சு அப்போதைக்கு வேணும்னா ஜாலியா இருக்கலாம். கிண்டல், கேலிப் பேச்சுகள் எந்த நட்பையும் வளர்க்காது. நாலு பேர்ல நல்ல பழக்கங்களோட ஒரு நண்பன் இருப்பது அந்த நட்பு வட்டத்துக்கு ரொம்பவே நல்லது. அவரிடம் உள்ள நல்ல பழக்கவழக்கங்கள் உங்களை அறியாமலேயே உங்கள் ஆழ்மனதில் பதிந்து உங்களை மாற்றும்.

உறவுகளைப் பிரிஞ்சு தனிக்குடித்தனம் வந்து நகரம் சார்ந்த வாழ்க்கை வாழ ஆரம்பிச்சிட்டோம். இந்த மாதியான வாழ்க்கையில், நல்ல நட்புகள்தான் நம்மை அடுத்தக்கட்டத்துக்கு அழைச்சுக்கிட்டுப்போகும்.
1272996-7_17362
ஒரு துறவிக்கு நூற்றுக்கணக்கான சீடர்கள். ரமேஷ், சுரேஷ்னு ரெண்டு நண்பர்களும் அவருக்கு சீடர்களா இருந்தாங்க.வாரா வாரம் சனிக்கிழமை சாயங்காலமானா அவரைச் சந்திப்பார்கள். அப்போதெல்லாம் அவர்கிட்டே சில ஆலோசனைகளைக் கேட்கிறது வழக்கம்.
ஒரு நாள் ரமேஷ், ‘சுவாமி, தியானம் பண்ணும்போது புகைபிடிக்கலாமா?’னு கேட்டான். ‘ம்ஹூம், பிடிக்கக் கூடாது’ன்னுட்டார். அவன் போனதும் சுரேஷ் வந்தான், ‘சுவாமி,புகை பிடிக்கும்போது தியானம் பண்ணலாமா?’னு கேட்டான். ‘ஓ… தாராளமா  பண்ணலாம்’னார்.
ரமேஷுக்குக் குழப்பமாகிடுச்சு. திரும்பவும் சுவாமிகிட்டே போய், `என்ன சுவாமி அவன் கேட்டதுக்கு மட்டும் சரினு சொல்லிட்டீங்க?’ன்னான். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரியவெச்சார்.

p150_17082
வீட்டைப் பூட்டி விட்டு டூர்  போயிருந்த அந்தக் குடும்பத்தினர் சாவிக்கொத்தை எங்கேயோ மிஸ் பண்ணிட்டாங்க. இன்னொரு சாவிக்கொத்து இருக்குமே. ஆமா இருக்கு. ஆனா, அதுவும் வீட்டுக்குள்ளதான் இருக்கு. அதனால பூட்டை  உடைச்சு வீட்டுக்குள்ள போனாங்க. டேபிளில் இருந்த இன்னொரு சாவிக்கொத்தை எடுத்து அந்தம்மா கண்ணுல ஒத்திக்கிட்டு, சுத்தியலுக்குப் பக்கத்துல வெச்சுட்டுப் போயிட்டாங்க.

சுத்தியலுக்கு ஆத்திரமான ஆத்திரம். ‘நாம இல்லைனா இவங்க வீட்டுக்குள்ளயே வந்திருக்க முடியாது. ஆனா, மரியாதை கொடுக்கிறது என்னவோ உனக்குப்போய் கொடுக்கிறாங்களே’னு  சாவியைப் பார்த்துக் கேட்டுச்சு.

‘நீ பூட்டோட மண்டையை உடைக்கிறே. ஆனால், நான்  பூட்டோட இதயத்தைத் திறக்கிறேன். அதனாலதான் எனக்கு இந்த மரியாதை’னு சொல்லிச்சு . எல்லோரிடமும் அன்பா இருக்கிறவங்களுக்கு எதிரிகளே இருக்க மாட்டாங்க. உண்மையில் அப்படிப்பட்டவங்களை எல்லோருமே விரும்புவாங்க.

120618_graduation18z_17557

 

அந்தக் கல்லூரியில வருஷத்துக்கு பாதிநாள்கூட வகுப்புகள் சரியாக நடக்காது. குறிப்பா புதுசா படம் ரிலீசானால் போதும், ஸ்டூடண்ட்ஸ் ஸ்டிரைக் பண்ணிடுவாங்க. போதாக்குறைக்கு அந்தக் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல் நடந்துச்சுனா ஸ்டூடண்ட்ஸ் ரெண்டு கோஷ்டியா பிரிஞ்சிடுவாங்க.

தேர்தல் முடியுறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடும். தேர்தல் முடிஞ்சாலும், ரெண்டு கோஷ்டியும் ‘அக்னி நட்சத்திரம் பிரபு கார்த்திக்’ மாதிரிதான் மோதிக்குவாங்க. அப்போதெல்லாம் அந்தக் கல்லூரி முதல்வர் முன்னெச்சரிகையா லீவுல போயிடுவார். அப்படியில்லைனா துணை முதல்வரைத்தான் பசங்களோட பேச்சுவார்த்தைக்கு அனுப்புவார். அவர் எப்போதும் ஒயிட் அண்ட் ஒயிட்டிலதான் கல்லூரிக்கு வருவார்.

சைக்கிள் செயினை எப்பவும்  இடுப்புலயே சுத்தி வைச்சிக்கிட்டு இருக்கிற மாணவன்கூட அவரைப் பார்த்தா ‘விஷ்’ பண்ணிட்டு நல்ல புள்ளையா போயிடுவான். அதுக்குக் காரணம் ரொம்ப வாஞ்சையா பேசுவார். அவங்க போக்கிலேயே போய் அவங்களைத் திருத்துவார். ஒரு கோஷ்டிய பத்தி அடுத்த கோஷ்டி புகார் பண்ணினா பொறுமையா கேட்பார்.

103760_1_lightbox_ideenwettbewerb_gesundheit_gewinnt_i_stockphoto_17591

அவங்களை பேசவிட்டுடுவார். ‘பொதுவா ஒருத்தரை முழுசா பேச விட்டுட்டோம்னாலே அவங்களை அதுக்கப்புறம், ஹேண்டில் பண்றது ரொம்ப ஈசி. `பால் கறக்கணும்னா மாட்டோட மடியைப் பிடிச்சுக் கறக்கணும். கொம்பைப் பிடிக்கக்கூடாது’ சொல்வாங்க. வாஸ்தவத்துல நிறைய பேர் அடுத்தவங்க பிரச்னையைக் கேட்கிறதுகூட இல்லைனு சொல்லி கண்சிமிட்டுவார்.

உலகத்தில எல்லாமே இரண்டாகத்தான் இருக்கு. முன்பக்கம்-பின்பக்கம், நல்லது-கெட்டது, இன்பம்-துன்பம், பாவம்-புண்ணியம், பாஸிட்டிவ்-நெகட்டிவ், பூ- தலை என சொல்லிக்கொண்டே போகலாம்.  வாழ்க்கையில் நமக்கு வரும் தடைகள், பிரச்னைகள், துன்பங்கள், துயரங்கள் இவற்றையெல்லாம் எதிர்கொள்ளும்போது நாம் எப்படி செயல்படுகிறோம் என்பது இரண்டாம் பட்சம்தான். அந்தப் பிரச்னையை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதுதான் ரொம்பவும் முக்கியம். How You make it என்பதைவிட How you take it என்பதுதான் முக்கியம்.

Comments

comments