0
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் கமல்ஹாசனின் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி ஒரு பக்கம் சுவாரஸ்யத்துடன் போய்க்கொண்டிருப்பதாக கூறப்பட்டாலும் இன்னொரு பக்கம் இந்த நிகழ்ச்சியில் உள்ள குறைகளை மிமி கிரியேட்டர்களுக்கு தங்கள் கற்பனைத்திறன் மூலம் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் வையாபுரி கதறிக்கதறி அழுததற்கான காரணம் தெரியவந்தது. ஹோம்சிக் எனப்படும் வீட்டு ஞாபகம் அவரை வாட்டியதாகவும், மனைவி மற்றும் குழந்தைகளை இரண்டு நாட்களாக பிரிந்திருப்பது தனக்கு வேதனையை கொடுத்ததாகவும், அவர் தேம்பி தேம்பி அழுததற்கான காரணமாக கூறப்பட்டது. மேலும் இத்தனை வருட காலமாக காலை எழுந்ததும் தனது மனைவிக்கு குட் மார்னிங் சொல்லும் பழக்கம் தனக்கு உண்டு என்றும் ஆனால்  இப்போது யார் யாருக்கோ சொல்வதாகவும், மனைவிக்கு குட்மார்னிங்  சொல்ல முடியவில்லை என்றும் அவர் கண்ணீருடன் கேமிரா முன் கூறினார்.,
மேலும் நேற்றைய புரமோ வீடியோவில் காயத்ரி ரகுராம் ‘எச்ச’ என்று யாரை கூறினார் என்பதற்கும் விடை கிடைத்துள்ளது. குக்கிங் டீம் தயார் செய்த சாப்பாடு கெட்டுப்போனது குறித்து  ஓவியா அணி புகார் கூற இதனால் கோபமடைந்த காயத்ரி ரகுராம், ஓவியா போன்ற எச்ச கூட வரமாட்டேன் என்று அப்பவே சொன்னேன் என்று காயத்ரி கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

Comments

comments