_18494 (1)

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு புரட்சி போராட்டத்தில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர் இளம்பெண் ஜூலி. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், சசிகலா, பிரதமர் மோடி ஆகியோர்களுக்கு எதிராக அவர் போட்ட கோஷம் அனைத்து தொலைக்காட்சிகளிலும் தலைப்பு செய்தியாகியது.

இந்த நிலையில் கமல்ஹாசன் நடத்தும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 15 நபர்களில் ஒருவராக ஜூலி அறிவிக்கப்பட்டதும், திரைத்துறையை சேராத ஒரே நபர் ஜூலி என்பதால் ஜூலியின் எண்ட்ரியை கொண்டிருந்தவர்கள் சுறுசுறுப்பானார்கள். மேலும் புரட்சி பெண் ஜூலி கலந்து கொள்வதால் நிகழ்ச்சி வித்தியாசமாக இருக்கும் என்று பலர் நினைத்தனர்.

அனைவரின் எதிர்பார்ப்பின்படியே மெரீனாவில் கரகோஷம் செய்த ஜூலி, பிக்பாஸ் வீட்டில் நுழைந்ததும் தன்னை கட்டிப்பிடிக்க ஆள் இல்லை என்று கூறி அதுவரை சாதாரணமாக சென்று கொண்டிருந்த நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார். மேலும் இளம் நடிகர் ஸ்ரீயிடம் சகஜமாக பேசி டென்ஷனாக ஸ்ரீயையும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்தார். முதல் நாள் நிகழ்ச்சி சாதாரணமாக சென்று கொண்டிருந்த நிலையில், ஜூலி எண்ட்ரி ஆனதும் நிகழ்ச்சி கலகலப்பாக்கியுள்ளதால் இனிவரும் நாட்களில் நிகழ்ச்சி மேலும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அவர் மற்றொரு பங்கேற்பாளரான நடிகர் ஸ்ரீயிடம் சென்று பேசிய வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விபரீத விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.  ஸ்ரீயிடம் அவர் பேசியதை தவறாக சித்தரித்து அந்தப் பெண்ணின் பெயருக்கு களங்க விளைவிக்கும் வகையில் ஊடகங்களில் செய்திகளும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களும் பகிரப்பட்டுவருகின்றன.
நிகழ்ச்சியில் ஜூலியும்-ஸ்ரீயும் பேசியதன் பின்னணி பற்றி நமக்குத் முழுதாகத் தெரியாது. அப்படி இருக்கும்போது இரண்டு இளைஞர்களைப் பற்றி தவறான முறையில் செய்திகளைப் பரப்பும் முன் அவர்களின் எதிர்காலம் பற்றி அக்கறைகொண்டு சற்று பொறுமை காப்பதே பொறுப்புள்ள ஊடகங்களும் சமூக ஊடகப் பதிவர்களும் செய்ய வேண்டிய செயலாகும்.

Comments

comments