NTLRG_20170614180400257085

சண்டை கலைஞராக இருந்து சினிமா நடிகரானவர் பொன்னம்பலம். தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் உள்ளார் பொன்னம்பலம். இவர் அதிமுக.,வில் இணைந்து அதிமுக.,வின் நட்சத்திர பேச்சாளராக இருந்து வந்தார். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக., கட்சிக்குள் ஏற்பட்ட பிளவால் அந்தக்கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.வில் தன்னை இணைத்து கொண்டார். மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பொன்னம்பலம் பா.ஜ.,வில் இணைந்தார்.

பா.ஜ.,வில் இணைந்தது பற்றி பொன்னம்பலம் கூறியிருப்பதாவது… “தற்போதைய சூழலில் பா.ஜ.,வால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் அதிமுக.,வில் ஒழுக்கம் – கட்டுப்பாடு இருந்தது, ஆனால் இப்போது அது இல்லை” என்று கூறியுள்ளார்.

 

Comments

comments