Tamil_News_large_1791915_318_219

புதுடில்லி : ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்காக பா.ஜ.,வால் அமைக்கப்பட்டுள்ள மூவர் குழு தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரையும், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவையும் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசிப்பதற்காக பா.ஜ., மூவர் குழு, காங்., தலைவர்கள் சோனியாவை இன்று(ஜூன் 16) சந்திக்க உள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் அரசியல் சாராதவராகவும், அனைவருக்கும் தெரிந்தவராக இருக்க வேண்டும் எனவும் பா.ஜ., விரும்புவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் டில்லி மெட்ரோ முன்னாள் தலைவர் ஸ்ரீதரனை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த பா.ஜ., பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து பா.ஜ., தேசிய தலைவரிடம் கேட்ட போது, அவர் இதனை மறுக்கவில்லை. அதே சமயம், யாருடைய பெயரையும் பா.ஜ., பரிந்துரைக்கவில்லை என கூறி உள்ளார். இருப்பினும், பொது வேட்பாளரை நிறுத்தும் முடிவுக்கு பா.ஜ., வந்துள்ளதால் காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஏற்றுக் கொள்ள கூடிய நபராக இருக்க வேண்டும் என்பதற்காக பா.ஜ., ஸ்ரீதரனின் பெயரை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

Comments

comments