0

தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருவதால், பாலிவுட் படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலை, பிரியங்கா சோப்ராவுக்கு உருவாகி உள்ளது.

சில மாதங்களுக்கு முன், சஞ்சய்லீலா பன்சாலி இயக்கத்தில், இர்பான் கான் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்து இருந்தார் பிரியங்கா. ஆனால், இப்போது, அந்த தேதிகளை, வேறு ஒரு ஹாலிவுட் படத்துக்கு அப்படியே துாக்கி கொடுத்து விட்டாராம். இதனால், படப்பிடிப்புக்கு செல்ல தயாராக இருந்த சஞ்சய்லீலா பன்சாலி தலைமையிலான குழு, அதிர்ந்து போயுள்ளது.

‘பிரியங்காவின் தேதி எப்போது கிடைக்கிறதோ… அப்போது தான், படப்பிடிப்பை துவங்க முடியும்’ என, நொந்து போய் கூறுகின்றனர், படக்குழுவினர். பிரியங்கா தரப்போ, ‘தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக, ஹாலிவுட் படத்துக்கு தேதி கொடுக்க வேண்டியதாகி விட்டது. கட்டாயம், சஞ்சய்லீலா பன்சாலிக்கு, பிரியங்கா கால்ஷீட் கொடுப்பார்’ என்கிறது.

 

Comments

comments