NTLRG_20170610103242491378

புரூஸ்லி படத்திற்கு பிறகு 7 படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். அடுத்தபடியாக அவரது நடிப்பில் செம படம் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. நாச்சியார், 4 ஜி, ஐங்கரன், அடங்காதே, குப்பத்து ராஜா போன்ற படங்களின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில், பாலா இயக்கும் நாச்சியார் படத்தில் இதுவரையில்லாத ஒரு மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

அதோடு, எப்போதுமே தனது படங்களில் நடிக்கும் ஹீரோக்களை அந்தந்த கதாபாத்திரங்களுக்கேற்ப முற்றிலுமாக மாற்றிவிடக்கூடியவர் பாலா. அந்த வகையில், சேது, பிதாமகன் படங்களில் விக்ரம், நந்தாவில் சூர்யா, அவன் இவன் படத்தில் விஷால்-ஆர்யா, பரதேசியில் அதர்வா ஆகியோரை தனது கதையின் கதாபாத்திரங்களுக்காக முழுமையாக மாற்றியவர் பாலா. அதேபோல் தற்போது ஜோதிகாவை கதையின் நாயகியாக வைத்து இயக்கி வரும் நாச்சியார் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷின் கெட்டப்பையும் மாற்றியிருக்கிறார் பாலா. இந்நிலையில், நேற்று சென்னையில் நடைபெற்ற செம படத்தின் ஆடியோ விழாவுக்கு வந்திருந்த ஜி.வி.பிரகாஷ், தனது தலையில் வித்தியாசமான ஹேர் கட்டிங் செய்திருப்பதால், அதை ஒரு துணியால் கட்டி மறைத்தபடி விழாவில் கலந்து கொண்டார்.

 

Comments

comments