0

திரைப்படத்துறையில் நுழைய வழி தெரியாமல் வடபழனியை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றித்திரிகிறவர்களின் எண்ணிக்கை லட்சங்களைத்தாண்டும்.

அவர்களுக்கு கிடைக்காத சினிமா வாய்ப்பு…. சிலருக்கு வெகு சுலபமாக கிடைத்துவிடுகிறது, அவர்களுக்கு திறக்காத திரைப்படத்துறையின் கதவுகள் சிலருக்கு விரியத்திறக்கின்றன.

முக்கியமாக திரைப்படத்துறையினரின் வாரிசுகளுக்கு.

ஒருதுளி வியர்வை சிந்தாமலே சினிமாவில் சிம்மாசனம் கிடைத்துவிடுவதாலோ என்னவோ… அவர்களுக்கு அதன் அருமை தெரிவதில்லை.

சினிமாவை கேளிக்கைக்கான இடமாக மட்டுமே எண்ணி என்ஜாய் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்களில் இயக்குநர் வெங்கட்பிரபு முக்கியமானவர்.

இளையராஜாவின் தம்பி கங்கை அமரனின் மகன் என்ற பதாகையை ஏந்தி படத்துறைக்கு வந்த இவர், உருப்படியாக எடுத்த ஒரே படம் – ‘சென்னை 28’.

அந்தப்படத்தின் வெற்றிக்குப் பிறகு பல படங்களை இயக்கிய வெங்கட் பிரபுவுக்கு அஜித்தை வைத்து மங்காத்தா படம் எடுக்கும் அளவுக்கு சினிமாவில் சிம்மாசனம் கிடைத்தது.

என்ன பிரயோஜனம்? குடிப்பதை மெயின் தொழிலாகவும்… படம் எடுப்பதை பார்ட் டைம் தொழிலாகவும் வைத்துக் கொண்டதால் சீக்கிரமே சீரழிந்துபோனார் வெங்கட்பிரபு.

venkat-prabhu_party

மங்காத்தா படத்துக்குப் பிறகு அவர் இயக்கிய பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, ‘சென்னை 28’ 2-ம் இன்னிங்கஸ் ஆகிய படங்கள் மண்ணைக்கவ்வின.

அதன் பிறகாவது குடிப்பதை விட்டொழித்துவிட்டு, சினிமாவில் விட்ட இடத்தைப் பிடிப்பார் என்று பார்த்தால்….

அதற்கு வாய்ப்பே இல்லை என்பது மட்டுமல்ல, வெங்கட்பிரபுவை இனி திருத்தவே முடியாது என்றும் தற்போது உறுதியாகி இருக்கிறது.

அடுத்து இயக்க உள்ள படத்துக்கு ‘பார்ட்டி’ என்று பெயரிட்டுள்ளார் வெங்கட்பிரபு.

தான் கெட்டுக் குட்டிச்சுவராகப்போனது போதாது என்று தமிழ் மக்களுக்கும் 0.

Comments

comments