_18494 (1)

‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களும் சேர்ந்து சுமார் ரூ.2500 கோடி ரூபாய் அளவில் வசூலித்துள்ளன. இவை தியேட்டர் வசூல் மட்டும்தான். இன்னும் மற்ற வியாபாரங்கள் அனைத்தையும் சேர்த்தால் சுமார் ரூ.3000 கோடி வரை வரும் என்கிறார்கள். இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து ரூ.300 கோடி ரூபாய் வரை செலவு செய்திருக்கலாம் என்பதுதான் திரையுலக வட்டாரத் தகவலாக இருக்கிறது.

‘பாகுபலி’ படத்தை உருவாக்கும் போதே நடிகர்களின் சம்பள விஷயங்களிலும் சரியான சம்பளத்தைத் தர வேண்டும் என்பதில் தயாரிப்பு நிறுவனம் உறுதியாக இருந்ததாம். அதற்கேற்றபடிதான் படத்தில் நடித்த அனைவருக்கும் சம்பளம் தந்தார்கள் என்று தெரிவிக்கிறார்கள்.படத்தின் நாயகன் பிரபாஸுக்கு மட்டும் 80 கோடி வரை சம்பளம் கொடுத்துள்ளதாகத் தற்போது செய்திகள் பரவி வருகின்றன. இந்தப் படத்திற்காக வேறு எந்தப் படத்திலும் நடிக்காமல் நான்கு வருடங்கள் வரை தன் ஒத்துழைப்பு அனைத்தையும் வழங்கியவர் பிரபாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம், படத் தயாரிப்பில் பிரபாஸும் ஒரு பங்குதாரர் தான் என்று டோலிவுட் வட்டாரங்களிலும் ஒரு பேச்சு உள்ளது. அதனால்தான் அவர் இந்தப் படத்தைத் தவிர வேறு எந்தப் படத்திலும் நடிக்க சம்மதிக்கவில்லை என்கிறார்கள். எப்படியிருந்தாலும் ‘பாகுபலி’ தயாரிப்பாளர்கள் தற்போது பல கோடிகளில் புரள ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு அவர்களது தைரியமும், துணிச்சலும்தான் காரணம் என்பதை மறுக்க முடியாது.

Comments

comments