பாட்னா: பீஹார் மாநிலத்தில், பள்ளி கட்டணம் கட்டாத சிறுமிகளை அரை நிர்வாண கோலத்தில் வீட்டுக்கு போக சொன்ன பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tamil_News_large_1793321_318_219

ஏழை தொழிலாளியின் மகள்கள்

பீஹார் மாநிலம், பெகுசராய் நகரில் உள்ள பள்ளியில் சுன்சுன் ஷா என்பவரின் இரண்டு மகள்கள் படித்து வருகின்றனர். முத்த மகள், முதல் வகுப்பும், இரண்டாவது மகள் நர்சரி வகுப்பிலும் படிக்கின்றனர். அவர்களுக்கான சீருடை மற்றும் பள்ளி கட்டணத்தை ஷா செலுத்தவில்லை. பள்ளி நிர்வாகம் சார்பில் பல முறை அறிவுறுத்திய பிறகும் ஷா பணம் செலுத்த சிறிது அவகாசம் கேட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை, மகள்களை வீட்டுக்கு அழைத்து செல்ல ஷா சென்ற போது, அவரை உள்ளே அழைத்து பேசி உள்ளார் ஒரு ஆசிரியை. அவரிடம் சீருடை கட்டணம், பள்ளி கட்டணம் குறித்து கேட்டுள்ளார். அப்போதும் அவகாசம் கேட்டுள்ளார் ஷா. கோபமடைந்த அந்த ஆசிரியை, சிறுமிகளின் சீருடைகளை உருவி, அவர்களை அரை நிர்வாண கோலத்தில் பள்ளிக்கு வெளியே விரட்டி அடித்துள்ளார். வீடு வரை அவர்கள் அப்படியே கிராம தெருக்களில் நடந்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் போலீசாருக்கு புகாராக சென்றதும், பள்ளி முதல்வர், ஆசிரியை உட்பட மூன்று பேரை கைது செய்தனர்.

Comments

comments