_18494 (1)

நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் நடிகர் சங்கம் கட்டடம் கட்ட சென்னை ஐகோர்ட் இடைக்கால தடைவிதித்துள்ளது. இந்த தடை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சென்னை, அபிபுல்லா சாலையில் சொந்தமாக நிலம் உள்ளது. இங்கு நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம் கட்டப்பட இருக்கிறது. சமீபத்தில் பூமி பூஜை எல்லாம் நடந்தது. ரஜினி, கமல் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

இந்நிலையில் சென்னை, தி.நகரை சேர்ந்த ஸ்ரீரங்கன், அண்ணமாலை ஆகியோர் நடிகர் சங்கம், 33 அடி சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், 33 அடி அகலமான சாலையில், கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.

சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே கட்டடம் கட்டப்பட இருக்கிறது. எந்த ஆக்கிரமிப்பும் செய்யப்படவில்லை என்று நடிகர் சங்கம் தங்களது தரப்பு விளக்கத்தை அளித்தனர். இந்த வழக்கில் சங்க கட்டடம் கட்ட இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி சார்பில் கட்டடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா…?, இல்லையா….? என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய இரண்டு வாரம் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், கட்டடம் கட்ட விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை மேலும் 2 வாரங்கள் நீட்டித்து உத்தரவிட்டனர்.

Comments

comments