1_12411

‘பாகுபலி 2′ திரைப்படம் வெளிவந்து 40 நாட்கள் ஆகிவிட்டது. இன்னமும் பல தியேட்டர்களில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. சுமார் ஒரு மாத காலம் மட்டுமே படம் ஓடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 40 நாட்களைக் கடந்து 50வது நாளை நோக்கி படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த 40 நாட்களில் சுமார் 1620 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளது ‘பாகுபலி 2′ படம். இதில் தென்னிந்தியாவிலிருந்து மட்டுமே சுமார் 620 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. ஹிந்தி டப்பிங் படத்தின் வசூல் சுமார் 700 கோடியும், வெளிநாடுகளில் 300 கோடி ரூபாயும் வசூலித்து மொத்தமாக 1620 கோடியைத் தொட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 133 கோடி, கர்நாடகாவில் 115 கோடி, கேரளாவில் 70 கோடி, ஆந்திரா, தெலுங்கான மாநிலங்களில் 300 கோடி என தென்னிந்திய மாநிலங்களில் மட்டும் இதுவரை வசூலான தொகை 620 கோடி. தென்னிந்திய அளவில் ஒரு படம் இவ்வளவு தொகையை வசூலிப்பது இதுவே முதல் முறை.

உலக அளவில் வசூலில் ‘பாகுபலி 2′ படம் 1600 கோடியைத் தாண்டியிருந்தாலும் ‘தங்கல்’ படத்திடம் தன்னுடைய முதல் இடத்தை கடந்த வாரம் இழந்துவிட்டது. இனி, சீனாவில் ‘பாகுபலி 2′ படம் வெளிவந்து வசூலித்தால் மட்டுமே ‘தங்கல்’ சாதனையை முறியடித்து மீண்டும் முதலிடத்தைப் பிடிக்க முடியும்.

 

Comments

comments