_18494

சென்னை: தமிழக சட்டசபையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., தங்க தமிழ்செல்வன் வெளிநடப்பு செய்தார். ஆளும்கட்சி எம்.எல்.ஏ., வெளிநடப்பு செய்துள்ளது தினகரன் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி இடையிலான பனிப்போரை வெளிகாட்டியிருக்கிறது. தமிழக சட்டசபை இரண்டு நாள் விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் கூடியது. இதில் ஆண்டிப்பட்டியில் ஆரம்ப சுகாதர நிலையம் அமைக்காதது ஏன் என தங்க தமிழ்செல்வன் கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் பதில் எதுவும் அளிக்கவில்லை. இதனையடுத்து தங்க தமிழ்செல்வன் அமைச்சரை கண்டித்து வெளி நடப்பு செய்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல்வரை சந்தித்து கட்சியில் தினகரனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தங்க தமிழ்செல்வன் கோரிக்கை விடுத்திருந்தார். கட்சி எங்களுக்கு; ஆட்சி உங்களுக்கு எனவும் அவர் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் அவர் ஆளும்கட்சியாக இருந்தும் அரசை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளது கட்சியில் இருக்கும் குமுறலையே வெளிக்காட்டியுள்ளது.

Comments

comments