_18494 (1)

எனக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே இருப்பது தம்மில் ஆரம்பித்து தம்மில் முடிந்த நட்பு என நடிகர் மாதவன் கூறி உள்ளார்.

புஷ்கர் – காயத்ரி இயக்கும் படம் விக்ரம் வேதா. இப்படத்தில் விஜய் சேதுபதி, மாதவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில் போலீஸ் வேடத்தில் மாதவனும், ரவுடி வேடத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். விக்ரமாதித்யன் – வேதாளம் கதையை மையமாக வைத்து புனைப்பட்டது தான் விக்ரம் வேதா படத்தின் கதை.

இப்படத்தில் என்கவுன்டர் போலீசாக மாதவன் நடித்துள்ளார். இப்படத்தில் குப்பத்து பெண்ணாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். ஒரு உறவை வேறு கோணத்தில் காட்டி உள்ள படம் இது.

சென்னையில் இன்று (ஜூன் 28) செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்த கொண்ட மாதவன், தான் நடித்து வரும் விக்ரம் வேதா படம் பற்றி பேசினார். அப்போது அவர், நான் பல படங்களில் நடித்திருந்தாலம் இப்படத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளேன். இப்படத்தில் நடிக்கும் போது எனக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே எந்த ஈகோவும் இல்லை.

சில விஷயங்களில் அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். அவர் ரசிகர்களை சந்தித்து வருவது மிகவும் நல்ல விஷயம். இதனால் அவருக்கும் எனக்கும் ஈகோவோ, மோதலோ, போட்டியோ ஏற்படவில்லை. இப்படத்தில் எனக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே இருப்பது தம்மில் ஆரம்பித்து தம்மில் முடியும் நட்பு. உறவை பற்றிய படம் இது என்றார்.

Comments

comments