NTLRG_20170607165339551764

ஆஸ்கர் விருது வென்ற ஈரான் நாட்டைச் சேர்ந்த இயக்குனர் மஜித் மஜிதி தற்போது இயக்கி வரும் ‘பியான்ட் தி கிளவுட்ஸ்’ (Beyond The Clouds) படத்தை தமிழிலும் உருவாக்க உள்ளார். இந்தியாவில் படமாக்கப்படும் இந்தப் படத்தை முதலில் ஹிந்தியில் மட்டுமே தயாரிக்க இருந்தார்கள். தற்போது உலக அளவில் திரையிட ஆங்கில மொழியிலும், கூடுதலாக தமிழ் மொழியிலும் தயாரிக்க உள்ளனர்.

படத்தை தமிழில் டப்பிங் செய்யாமல் நேரடியாகவே தமிழில் படமாக்க உள்ளார்கள். படத்தின் கதையில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் ஆகியவற்றைப் பேசும் கதாபாத்திரங்களும் கலந்து இருப்பதால் மஜித் மஜிதி இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. அதற்காக தமிழ் பேசக் கூடிய சில நடிகர்களையும் அவர் படத்திற்காகத் தேர்வு செய்ய உள்ளார். பிரபல இந்தி நடிகர் ஷாகித் கபூரின் தம்பி இஷான் கட்டர், மலையாள நடிகை மாளவிகா மோகனன், பழம்பெரும் நடிகை ஜி.வி.சாரதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏ.ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

மஜித் மஜிதியின் இந்தப் படம் தமிழிலும் வெளிவருவது தமிழ்த் திரையுலகத்திற்குப் பெருமையான ஒரு விஷயம்.

 

Comments

comments