kanimozhi_2712518f

தமிழகத்தை ஆளக்கூடிய தகுதி மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமே உள்ளது என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

தஞ்சாவூரில் இன்று திமுக தலைவர் கருணாநிதியின் 94 -வது பிறந்தநாளையொட்டி பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமினை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் கனிமொழி பேசினார். அப்போது அவர் கூறுகையில், ”தமிழகத்தை எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு முதல்வராக ஆளக்கூடிய திறமையும், தகுதியும் மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமே உள்ளது. இது தொடர்பாக நிறைய ஊடகங்கள் கருத்து கணிப்பு நடத்தியது. அதில் அவர் தான் ஆட்சிக்கு வர வேண்டும் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே ஸ்டாலின் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமும். மற்ற கட்சிகள் ஆட்சிக்கு வருவதை ஏற்க முடியாது.

தமிழகத்தின் கழகங்களின் ஆட்சியால் தான் காவிரி நீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் கடந்த 50 ஆண்டு காலமாக தீர்க்க முடியாமல் போனது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள், தொழில் வளர்ச்சி, மருத்துவ வசதிகள், கல்வி வளர்ச்சி எல்லாம் இந்தியாவில் ஏன் பாஜக ஆட்சி புரியும் மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எல்லாம் காரணம் திமுக ஆட்சி தான். அதுவும் முதல்வராக இருந்த கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தான் தமிழகம் வளர்ச்சிப் பெற்றது” என்றார் கனிமொழி.

Comments

comments