_18494 (1)

‘அமெரிக்க அதிபர் ட்ரம்பைத் தொடர்ந்து விமர்சித்ததால் ட்விட்டரில் என்னை பிளாக் செய்துவிட்டார்’ என்று எழுத்தாளர் ஸ்டீபன் கிங் தெரிவித்துள்ளார்.

‘இட்’ மற்றும் ‘ஃபைர்ஸ்டார்ட்டர்’ என்னும் திகில் நாவல்களின் எழுத்தாளர் ஸ்டீபன் கிங். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னர் இருந்தே ட்ரம்பைத் தொடர்ந்து விமர்சித்து வருபவர்.

அவர் கடந்த பிப்ரவரி மாதம், ”ட்ரம்ப் அமெரிக்க – ஆஸ்திரேலிய உறவை நாசமாக்குகிறார். அவர் உணர்ச்சி வசப்படும், மோசமான மனப்பான்மை கொண்ட முட்டாள்” என்று ட்விட்டரில் விமர்சித்திருந்தார்.

ட்ரம்பின் வெற்றி குறித்து டிசம்பரில் புலம்பியிருந்த ஸ்டீபன், ட்ரம்ப் அமெரிக்க அதிபராவது குறித்தும் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ‘அமெரிக்க அதிபர் ட்ரம்பைத் தொடர்ந்து விமர்சித்ததால் ட்விட்டரில் என்னை பிளாக் செய்துவிட்டார்’ என்று எழுத்தாளர் ஸ்டீபன் கிங் தெரிவித்துள்ளார்.

trump_3174938a

ஸ்டீபன் கிங்கின் ட்விட்டர் பதிவு

வெள்ளை மாளிகைக்கு கடிதம்

ட்ரம்ப் தங்களது ட்விட்டர் கணக்குகளை பிளாக் செய்துவிட்டார் எனவும், அவற்றை உடனே அன்பிளாக் செய்யவேண்டும் என்றும் வழக்கறிஞர்களான இரண்டு ட்விட்டர் பயனாளிகள் வெள்ளை மாளிகைக்குக் கடிதம் வாயிலாகக் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இதுகுறித்துப் பதிலளிக்க வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Comments

comments