0

தமிழில், வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் துல்கர் சல்மான். மலையாளத்தில் சில படங்களில் நடித்து வரும் துல்கர் சால்மான், தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கில் உருவாகி வரும் மகாநதி படத்திலும் நடிக்கிறார். மறைந்த நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், சமந்தா இருவரும் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடிக்கிறார்கள். எவடே சுப்ரமணியம் தெலுங்கு படத்தை இயக்கிய அஸ்வின் நாக் இந்த படத்தை இயக்குகிறார்.

இதில், நடிகை சாவித்ரியின் வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். அதற்காக ஓரளவு வெயிட் போட்டு சாவித்ரியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் சாவித்ரியின் கணவரான நடிகர் ஜெமினிகணேசன் வேடத்தில் மலையாள நடிகர் துல்கர்சல்மான் நடிக்கிறார். அதற்காக தன்னை தயார்படுத்திக்கொண்டு வந்த அவர், ஐதராபாத்தில் நடைபெற்று வரும் மகாநதி படப்பிடிப்பில் நேற்று முதல் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

Comments

comments