0

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் 15 பேர்களில் ஒவ்வொருவராக வெளியேற்றப்படுவார் என்பது விதிமுறைகளில் ஒன்று. இந்த நிலையில் முதல் ஆளாக வெளியேறுபவர் யார் என்பது குறித்த கேள்வி அனைவரிடமும் இருந்த நிலையில் நேற்று நிகழ்ச்சியில் இருந்து நடிகர் ஸ்ரீ வெளியேற்றப்பட்டார்.

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டியவர் யார் என்பது குறித்த வாக்கெடுப்பில் ஸ்ரீக்கு அதிக வாக்குகள் கிடைத்த நிலையில், அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் பிக்பாஸ் மருத்துவரின் பரிந்துரையின்படி அவர் வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பிக்பாஸ் குடும்பத்தில் இருந்து வெளியேறும் முன் அனைவரிடமும் இருகிய முகத்துடன் விடைபெற்ற ஸ்ரீக்கு ஆறுதல் கூறி வழியனுப்பி வைத்தனர். குறிப்பாக இந்த நிகழ்ச்சியின் முதல் நாளில் ‘என்னை விட்டு போயிடனும்னு நினைக்காதே’ என்று கூறிய ஜூலியை, ஸ்ரீ ஏமாற்றிவிட்டதாக கருதப்படுகிறது.

Comments

comments