43119-l

நாக சைதன்யா, தமன்னா நடிப்பில் வெளிவந்து தெலுங்கில் சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்ற ‘100% லவ்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘100% காதல்’ படத்தில் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். எம்.எம்.சந்திரமௌலி இயக்கும் இப்படத்தின் நாயகியாக ஹெபா படேல் நடிக்கவிருக்கிறார் என சில செய்திகள் இணையதளங்களில் வெளிவந்தன. ஆனால், லாவண்யா திரிபாதியே இப்படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தின் 90% காட்சிகளை லண்டனில் படமாக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம். மீதமுள்ள 10% காட்சிகள் இந்தியாவில் படமாக்கப்படுமாம். ஜி.வி., லாவண்யா நாயகன், நாயகியாக நடிக்கும் ‘100% காதல்’ படத்தில் நாசர், லிவிங்ஸ்டன், அம்பிகா, யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

 

Comments

comments