_18494 (1)

புதுடில்லி: ஜனாதிபதி பதவிக்கு அத்வானி மிகப் பொருத்தமானவர் என பா.ஜ., எம்.பி.,யும் நடிகருமான சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.

பொருத்தமானவர்:

இதுகுறித்து டுவிட்டரில் அவர் தெரிவித்ததாவது: புதிய ஜனாதிபதியாக பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை தேர்வு செய்ய வேண்டும். அவரது நலம் விரும்பிகள் விரும்புவதே எனது விருப்பமும். பெரும் மதிப்புமிக்க அப்பதவிக்கு, மிகுந்த அனுபவம் வாய்ந்த அத்வானி மிகப் பொருத்தமானவரக இருப்பார். பா.ஜ.,வின் மூத்த தலைவரான அவருக்கு அந்த கவுரவம் வழங்கப்படும் என நம்புகிறேன். நாட்டு மக்கள் அத்வானிக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி யார்?

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம், ஜூலை, 24ல் முடிகிறது. இதையொட்டி, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் ஜூலை, 17ல், நடக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக, ஆளும், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் தீவிரமாக ஆலோசித்து வரும் நிலையில், சத்ருகன் சின்ஹா இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

comments