_18494 (1)

பிரபல நடன மாஸ்டர் சுந்தரத்தின் மகன் பிரபுதேவா. சினிமாவில் ஒரு நடனக் கலைஞராக என்ட்ரியான அவர், பின்னர் நடன மாஸ்டராக பணியாற்றினார். அதன்பிறகு பாடலுக்கு நடனமாடினார். அவர் நடினமாடிய சிக்குபுக்கு சிக்கு புக்கு ரயிலே, சின்ன ராசாவே சித்தெறும்பு உள்ளிட்ட பல பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. இந்த நேரத்தில்தான் ஜென்டில்மேனைத் தொடர்ந்து தான் இயக்கிய காதலன் படத்தில் பிரபுதேவாவை ஹீரோவாக்கினார் இயக்குனர் ஷங்கர்.

அப்படி தனது ஹீரோ பிரவேசத்தைத் தொடங்கிய பிரபுதேவா, குறுகிய காலத்தில் பிரபல ஹீரோவாகி விட்டார். ஒருகட்டத்தில் இயக்குனர் அவதாரம் எடுத்த அவர், தமிழ், தெலுங்கி படம் இயக்கியவர் பின்னர் இந்திக்கும் சென்று புகழ் கொடி நாட்டினார். அதையடுத்து தற்போது மீண்டும் அவர் நடிகராகியிருக்கிறார். ஏ.எல்.விஜய் இயக்கிய தேவி படத்தில் நாயகனாக நடித்த பிரபுதேவா, தற்போது யங் மங் சங் மற்றும் மெர்குரி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இதில் மெர்குரி படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் வசனமே கிடையாதாம். நடிப்பு, பின்னணி இசை மூலமாக கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர். முக்கியமாக பிரபுதேவா இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.

இதுபற்றி பிரபுதேவா கூறுகையில், முதன்முறையாக வில்லனாக நடித்திருப்பது புதிய அனுபவமாக அமைந்தது. முக்கியமாக படத்தில் வசனமே பேசாமல் நடித்திருக்கிறேன். நான் மட்டுமின்றி அனைத்து கேரக்டர்களுமே அப்படித்தான் நடித்திருக்கிறார்கள். அதனால் நடிக்க ரொம் பவே கஷ்டப்பட்டேன். இந்த மெர்குரி படம் தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்கிறார் பிரபுதேவா.

Comments

comments