0

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்கும் ‘ஸ்பைடர்’ படம் முதலில் ஜுன் 23ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின் பல வேலைகள் முடிவடையாததால் படத்தை செப்டம்பர் மாதம் வெளியிடுகிறோம் என்று அறிவித்தார்கள். படத்தின் வசனக் காட்சிகள் படப்பிடிப்பு பத்து நாட்களுக்கு முன்பாக முழுவதும் முடிந்துவிட்டது. இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட வேண்டி உள்ளதாம்.

இதனிடையே, இப்படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப் போகலாம் என டோலிவுட் வட்டாரங்கள் தகவல் வெளியானது. ஜுனியர் என்டிஆர் நடித்து வரும் ‘ஜெய் லவகுசா’ படமும் செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டதே அதற்குக் காரணம் என்றார்கள். ஆனால், ‘ஸ்பைடர்’ தயாரிப்பாளர்கள் படத்தின் வெளியீடு இதற்கு மேலும் தள்ளிப் போகாது என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டார்கள்.

சுமார் 110 கோடி ரூபாய் செலவில் தமிழ், தெலுங்கில் படமாக்கப்பட்டு வரும் ‘ஸ்பைடர்’ படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. படத்தை மிகப் பெரும் அளவில் வெளியிட இப்போதே வேலைகளை ஆரம்பித்துவிட்டார்கள்.

Comments

comments