_18494 (1)

பெங்களூரு: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் அந்நிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக, சுதாகரனை ஆஜர்படுத்த, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில், சசிகலா, தினகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி கர்நாடகா மாநிலம் பெங்களூரு சிறையில் உள்ள சுதாகரனுடன் இந்த வழக்கு தொடர்பாக பேசுவதற்காக, தினகரனும், டாக்டர் வெங்கடேஷும் நேற்று முன்தினம், பெங்களூரு சென்றனர். நேற்று மாலை, 3:50க்கு சுதாகரனை சந்திக்க, சிறைத்துறை அனுமதி அளித்தது. அவருடன் வழக்கு சம்பந்தமாக பேசி விட்டு, மாலை, 5:45க்கு, இருவரும் சிறையை விட்டு வெளியில் வந்தனர்.

Comments

comments