Bihar5

பீகாரில் உள்ள ஒரு பள்ளியில் பள்ளி கட்டணம் செலுத்தாத காரணத்தால் இரண்டு இளம் பெண்களை அரை நிர்வாணமாகப் பள்ளியில் இருந்து விரட்டி உள்ளது பள்ளி நிர்வாகம்.

பீகார் மாநிலத்தில் உள்ள பெகுசராவில் அமைந்திருக்கும் பி.ஆர்.ஆர்.கல்விச்சாலையில் சுன்சுன் சாஹ் என்பவரின் இரு மகள்களும் படிக்கிறார்கள். ஒரு மகள் இரண்டாம் வகுப்பும் மற்றொரு மகள் நர்ஸரி வகுப்பிலும் படித்துவரும் நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை தனது இரு மகள்களையும் பள்ளியில் இருந்து அழைத்துவர சுன்சுன் சென்றபோது மாணவிகளின் ஆசிரியர் அஞ்சன குமாரி இவரைச் சந்திக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

இருவரது பள்ளி கட்டணமும், சீருடைக்கான பணத்தையும் செலுத்துமாறு அவர் கூறியுள்ளார், தன்னிடம் தற்போது பணம் இல்லை இந்த மாதம் இறுதிக்குள் கட்டிவிடுகிறேன் என்று அவர் மன்றாடிக் கேட்டபோதும், ஆத்திரமடைந்த ஆசிரியர் அஞ்சன குமாரி இரு பெண்களது சீருடையையும் கழட்டிவிட்டு பள்ளியில் இருந்து விரட்ட முயன்றுள்ளார்.

உடனே பள்ளியின் தலைவரான என்.கே.ஜா-விடம் முறையிட்டுள்ளார் சுன்சுன், ஆனால் அவரும் ஆசிரியருடன் சேர்ந்து கொண்டு பெண்களை அரை நிர்வாணமாக்குமாறு உத்தரவிட்டிருக்கிறார்.

Tamil_News_large_1793321_318_219

இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆசிரியர் அஞ்சன குமாரி, பள்ளி தலைவர் என்.கே.ஜா ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

பீகாரின் பள்ளி கல்வித் துறை அமைச்சரான அஷோக் சௌத்ரி இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும், சமந்த பட்டவர்கள் மீதும் பள்ளி நிர்வாகத்தின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Comments

comments