[

சிம்பு நடித்த படங்கள் குறிப்பிட்ட தேதியில் வெளியாவதே ஆச்சர்யம். அந்த ஆச்சரயத்தை நிகழ்த்திக்காட்டி இருக்கிறது மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம். இந்தப் படம் ஜூன் 23-ம் தேதி வெளியாகிறது.

ஏற்கனவே வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டாலும் சிம்பு படம் என்பதால் பலரும் நம்பிக்கையில்லாமல் தான் இருந்தனர். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனை விரட்டி வேலை வாங்கி படத்தை ரெடி பண்ண வைத்துவிட்டார் மைக்கேல் ராயப்பன். படம் ரெடியான கையோடு தணிக்கைக்கு அனுப்பி சான்றிதழும் பெற்றுவிட்டார்.

அடுத்த கட்டமாக, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்துக்கு தியேட்டர்களை புக் பண்ணும் பணிகளையும் முடுக்கிவிட்டார். ஏஏஏ படத்துக்கு தமிழ்நாட்டில் மட்டும் 450க்கும் மேற்பட்ட தியேட்டர்களை புக் பண்ணிவிட்டார்களாம். கேரளாவில் 75 தியேட்டர்களிலும், கர்நாடகாவில் 50 தியேட்டர்களிலும், வட இந்தியாவில் 50 தியேட்டர்களிலும் ஏஏஏ படம் வெளியாக உள்ளது.

வெளிநாடுகளில் 350க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது. இவற்றில் இலங்கையில் மட்டுமே 40க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது. தற்போதைய தகவலின்படி, உலகம் முழுக்க ஏறக்குறைய 1000 தியேட்டர்களில் வெளியாவதன் மூலம் சிம்பு நடித்த படங்களிலேயே அதிக எண்ணிக்கையில் வெளியாகும் படம் என்ற பெருமையும் ஏஏஏ படத்துக்குக் கிடைத்திருக்கிறது.

 

Comments

comments