NTLRG_20170630141119276504

விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் ராகேஷ் சர்மா. இவரது வாழ்க்கையை மையமாக வைத்து பாலிவுட்டில் படம் உருவாகிறது. இதில் ராகேஷ் வேடத்தில் அமீர்கான் நடிக்கிறார். மகேஷ் மாத்தாய் இயக்குகிறார். சித்தார்த் ராய் கபூர் தனது புதிய தயாரிப்பு நிறுவனமா ராய் கபூர் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்க, இவருடன் அமீர்கானும் இணைந்து தயாரிக்கிறார்.

அடுத்தாண்டு படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ள நிலையில் தற்போது படத்திற்கு தலைப்பு முடிவாகியுள்ளது. அதன்படி படத்திற்கு “சல்யூட்” என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

அமீர் கான், தற்போது தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் என்ற படத்தில் நடிக்கிறார். இதை முடித்ததும் சல்யூட் படத்தில் நடிக்கிறார்.

Comments

comments