சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விவேகம்’ படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். அஜித், அனிருத் கூட்டணியில் ஏற்கெனவே ‘வேதாளம்’ படத்தின் ஆலுமா டோலுமா பாடல் பட்டித்தொட்டியெல்லாம் ஹிட் அடித்தது. அதனால் விவேகம் படத்தின் பாடல்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

surviva_01420_21442

சில நாள்களுக்கு முன்புதான் அனிருத் ட்விட்டரில் சர்விவா பாடலின் டீசரை வெளியிட்டார். அனிருத் மற்றும் யோகி பி இருவரும் பாடியிருந்த இந்தப் பாடல் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

சர்விவா பாடலின் ஃபுல் வெர்ஷன், வரும் திங்கள் கிழமை (19 ஆம் தேதி) வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், இன்று அனிருத் சோனி மியூசிக் இணையதளத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ‘சர்விவா பாடல் டீசருக்கு நீங்கள் கொடுத்த பெரிய ஆதரவுக்குப் பிறகு, முழுப்பாடலை ரிலீஸ் செய்ய மிகவும் ஆர்வமாக உள்ளேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் நாங்கள் திரும்ப வர்றோம். திங்கள் கிழமை 6 மணிக்கு சர்விவா முழு பாடலை நீங்கள் இணையத்தில் கேட்கலாம்’ என்று கூறியுள்ளார்.

சர்விவா பாடல் பற்றி அனிருத்தின் வீடியோ! #Surviva

Comments

comments