1_12411

தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை… எதிரிக்கு தலையே இருக்கக் கூடாது என்கிற கொள்கையைக் கொண்டது சன் டிவி.

இப்படியொரு நல்லெண்ணம் சன் டிவிக்கு இருப்பதால் தற்போது பலன் அடைந்தவர் யார் என்றால்… சிவகார்த்திகேயன்தான்.

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை சமீபத்தில் 16 கோடிக்கு வாங்கியது விஜய் டிவி.

சிவகார்த்திகேயனின் முந்தையப் படமான ரெமோ படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் வெறும் 8 கோடிக்குத்தான் விலைபோனது. ரெமோவை வாங்கியது ஜெயா டிவி.

ரெமோ படத்துக்கு முன் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படத்தின் சாட்டிலைட் ரைட்ல் 5.5 கோடிக்குத்தான் விற்பனையானது. இதை வாங்கியது ஜீ டிவி.

இந்த ரேன்ஜில் இருந்த சிவகார்த்திகேயனின் சாட்டிலைட் ரைட்ஸ் மார்க்கெட்டை வேண்டுமென்றே அதிக விலை… அதுவும் இரண்டு மடங்கு கொடுத்து உச்சத்த்தில் கொண்டுபோய் வைத்தது விஜய் டிவி.

வேலைக்காரன் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை இரண்டு மடங்கு விலை கொடுத்து விஜய் டிவி வாங்கியதை அறிந்த சன் டிவி தரப்பு செம கடுப்பாகியிருக்கிறது.

ஏற்கனவே சொன்னதுபோல், தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை… எதிரிக்கு தலையே இருக்கக் கூடாது என்கிற கொள்கையைக் கொண்ட சன் டிவி, பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஆரம்பித்துள்ள புதிய படத்தின் சாட்டிலைட் ரைட்ஸுக்கு தூண்டில் போட்டது.

சன் டிவி போட்ட தூண்டிலில் 18 கோடி என்ற பிரைஸ் டேக் இருக்க, விஜய் டிவியைவிட 2 கோடி அதிகம் தருகிறதே என்ற ஆசையில் சன் டிவி போட்ட தூண்டிலை லபக் என்ற கவ்விக்கொண்டுவிட்டது சிவகார்த்திகேயன் தரப்பு.

பொன்ராம் – சிவகார்த்திகேயன் வெற்றிக் கூட்டணி இணையும் மூன்றாவது படம் என்றாலும், 18 கோடி என்பது அதிகபட்சவிலைதான்.

அதனால் சன் டிவிக்கு நஷ்டம் இல்லை என்றாலும், முதலீட்டையும், லாபத்தையும் அள்ள சில வருடங்கள் ஆகலாம்.
அதற்காக சன் டிவி வருத்தப்பட வாய்ப்பில்லை.

விஜய் டிவிக்குப் போக வேண்டிய படத்தை தட்டிக்கொண்டு வந்து விட்டோம் என்ற வெற்றி மமதைக்கு முன்னால் 18 கோடி எல்லாம் சன் டிவிக்கு ஒரு தொகையே இல்லை…

விஜய் டிவிக்கும் சன் டிவிக்கும் மோதலை உண்டாக்கி செமத்தியாய் குளிர்காய்ந்துவிட்டார் சிவகார்த்திகேயன்.

Comments

comments