_18494 (1)

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவளிப்பது குறித்து காலம் கனிந்து வரும்போது முடிவை வெளியிடுவோம் என்று தம்பிதுரை, வெங்கய்ய நாயுடுவைச் சந்தித்தபின் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, ”பாஜகவை ஆதரிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்துபேசி முடிவெடுப்பார்கள்” என்றார்.

’வெங்கய்ய நாயுடு என் நண்பர்’

வெங்கய்ய நாயுடு உடனான சந்திப்பு குறித்த கேள்வி எழுப்பப்பட்டபோது, ”குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசிக்கத்தான் அவரைச் சந்திக்க வேண்டுமென்பதில்லை. இங்குதான் என்னுடைய இல்லமும் இருக்கிறது. அவர் என்னுடைய நண்பர். அவரை இங்கே சந்திப்பது என்னுடைய வழக்கம். முக்கிய அலுவலாக டெல்லி வந்துவிட்டு, அவரைச் சந்தித்திருக்கிறேன். அவ்வளவுதான்.

குடியரசுத் தேர்தலில் அதிமுக ஆதரவு யாருக்கு என்பது குறித்து தனிப்பட்ட முறையில் என்னால் கருத்துக் கூற இயலாது. அதிமுகவினர்தான் இதுகுறித்து முடிவெடுப்பர். காலம் கனிந்து வரும்போது கருத்தை வெளியிடுவார்கள். இன்னும் சில நாட்களில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

Comments

comments