0

சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் டிராபி கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி மிக மோசமாக விளையாடியதால் அதிருப்தி அடைந்த அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி ஜெயசேகரா, இலங்கை வீரர்களின் உடல்தகுதி குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்.

இதுகுறித்து கிரிக்கெட் போர்டின் அனுமதி பெறாமலேயே ஊடகங்களுக்கு பேட்டியளித்த இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா,  ‘கிளிகூடு பற்றி குரங்குக்கு என்ன தெரியும்’ என்று கூறினார். மலிங்காவின் இந்த பேட்டி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்த இலங்கை கிரிக்கெட் வாரியம் மலிங்காவை ஒரு ஆண்டு சஸ்பெண்ட் செய்தது. ஆறு மாதங்களுக்கு பின் இந்த சஸ்பெண்ட் உத்தரவு அமலுக்கு வரும் என்றும் அதுவரை அவர் விளையாடும் போட்டிகளில் 50% அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் இலங்கை கிரிக்கெட் வீரர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Comments

comments