துடில்லி: நேரு குடும்பத்தை சேர்ந்தவரும், மத்திய அமைச்சர் மேனகாவின் மகனுமான வருண், பா.ஜ., கட்சியில் ஓரம் கட்டப்பட்டுள்ளதால், காங்கிரசுக்கு செல்வது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tamil_News_large_1786422_318_219

தனி கட்சி துவக்கிய மேனகா

மறைந்த பிரதமர் இந்திராவின் இளைய மகன் சஞ்சய் – மேனகாவின் மகன் வருண். ஆனால், சஞ்சய் மறைவுக்கு பின் இந்திரா மீது அதிருப்தி கொண்ட மேனகா, 1983ம் ஆண்டு சஞ்சய் விசார் மஞ்ச் என்ற தனி கட்சியை துவக்கினார். பின்னர், மேனகாவும், வருணும் பா.ஜ.,வில் இணைந்தனர். மேனகா தற்போது மத்திய அமைச்சராக இருக்கிறார். பா.ஜ.,வில் தீவிரமாக செயல்பட்ட வருண், இந்துத்துவா கொள்கைகளை கடுமையாக பின்பற்றினார். அவர், 2009ம் ஆண்டு சர்ச்சை முறையில் பேசியதால், சிறைக்கு செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டது. உ.பி.,யில் பா.ஜ.,வின் முக்கிய தலைவராக அவர் உருவெடுத்தார். ஆனால், பா.ஜ.,வின் தேசிய தலைவராக அமித் ஷா பொறுப்பேற்ற பிறகு, வருண் ஓரம் கட்டப்பட்டார். 2015ம் ஆண்டில் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன் நடந்த உ.பி., சட்டசபை தேர்தலில் வருண் முழுமையாக ஓரம் கட்டப்பட்டார். உ.பி., முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டது, வருணுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது.

பிரியங்காவுடன் நல்லுறவு

இந்த சூழ்நிலையில் தான் அவர் காங்கிரசுக்கு செல்கிறார் என்ற பேச்சு அடிப்பட துவங்கியுள்ளது. பா.ஜ.வில் இருந்தாலும், காங்., தலைவர் சோனியாவின் மகள் பிரியங்காவுடன் அருண் தொடர்பில் தான் இருந்து வருகிறார். பிரியங்கா உதவியுடன் சோனியாவை வருண் இரண்டு, மூன்று முறை நேரில் சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற ஒரு சந்திப்பு, கடந்த மார்ச், 25ம் தேதி சனிக்கிழமை டில்லியில் உள்ள, எண், 10, ஜன்பத் இல்லத்தில் நடந்துள்ளது. எனினும், வருண் காங்கிரசுக்கு வந்தால் சோனியா, ராகுல் மற்றும் வருண் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுமோ என்ற சந்தகேம் உள்ளது. ஆனால், தற்போது வருண் உ.பி., மாநிலத்தில் மட்டும் தான் கவனம் செலுத்த போகிறார். இது காங்கிரசுக்கு வலு சேர்க்கும் என்று வருண் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். மத்திய அமைச்சர் மேனகா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். எனினும், மகனின் எதிர்காலம் என்பதால், ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் எதிர்ப்பை தொடர முடியாது என்றும் கூறப்படுகிறது.

Comments

comments