0

கார்த்தி வெற்றிப்படத்தில் நடித்து நீண்ட காலமாகிறது. ‘சதுரங்க வேட்டை’ பட இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தற்போது கார்த்தி நடித்து வரும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் வெற்றி பெற்றால் தான் அவர் முன்னணி ஹீரோக்கள் வரிசையில் இருக்க முடியும். இல்லை என்றால் அவரது நட்சத்திர அந்தஸ்த்து ஆட்டம் கண்டுவிடும்.

இந்த நெருக்கடியை புரிந்து கொண்டு தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கவனம் செலுத்தி வருகிறார கார்த்தி. கார்த்தியுடன் ரகுல் ப்ரீத் சிங், அபிமன்யூ, ‘போஸ்’ வெங்கட் முதலானோர் நடிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். ‘மாயா’ படப்புகழ் சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை சிவ நந்தீஸ்வரன் கவனிக்கிறார். கலை இயக்கத்தை கே.கதிர் கவனிக்கிறார்.

கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்தப்படத்தின் இறுதிகட்ட பணிகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்சால்மேரில் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருகிற 30ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து இப்படத்தின் ஆடியோ மற்றும், டிரைலர் விரைவில் வெளியாகிறது.

Comments

comments