[

சமீபத்தில் புதுமுக இயக்குநர் ஆர்கே.சரவன் இயக்கத்தில், ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்த்ராஜ், முனீஸ்காந்த் என ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்து வெளியான படம் மரகத நாணயம். இதுவும் பேய் படம் தான் என்றாலும் அதை முற்றிலும் புதிய கோணத்தில் ரசிகர்கள் ரசிக்கும்படி காமெடியாக சொல்லியிருந்தார் இயக்குநர். இதனால் விமர்சகர்கள் மத்தியிலும் இப்படம் பாராட்டை பெற்றது. ஆனால் படத்திற்கு போதுமான கலெக்ஷ்ன் தான் இல்லையாம். இதனால் தயாரிப்பாளர் சற்று வருத்தத்தில் உள்ளார்.

இந்நிலையில் வரும் வாரம் ரம்ஜான் விடுமுறை வருவதால் அன்றைய தினம் ஜெயம் ரவியின் வனமகன், சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்கள் ரிலீஸாக உள்ளன. இதனால் அனேக தியேட்டர்களில் கடந்தவாரம் வெளியான மரகதநாணயம் படங்கள் உட்பட பல படங்கள் தூக்கப்படும் சூழல் உருவாகி இருக்கிறது. படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தும், அதை முழுமையாக தியேட்டர்களில் திரையிட முடியவில்லையே என படக்குழுவினர் வருத்தத்தில் இருக்கின்றனர்.

 

Comments

comments