நடிகர் என்பதையும் தாண்டி பன்முக கலைஞர் சிவக்குமார். இதிகாசங்கள் சொற்பொழிவு, யோகம் என பல்வேறு திறமைகளை உடையவர். ஓவியம் வரைவதிலும் சிறந்த வல்லவர். சின்ன வயது முதல் ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் கொண்ட சிவக்குமார், இதுவரை தான் வரைந்த ஓவியங்கள் அனைத்தையும் சமீபத்தில் கண்காட்சியாக நடத்தினார்.

சிவக்குமாருக்குள் இவ்வளவு பெரிய ஓவிய திறன் இருக்கா என்று அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். இதற்கிடையே இருதினங்களுக்கு முன்னர் திமுக., தலைவர் கருணாநிதி தனது 94-வது பிறந்தநாளை கொண்டாடினார். அதோடு, சட்டசபையில் 60 ஆண்டுகள் கடந்ததையொட்டி திமுக., சார்பில் வைர விழா கொண்டாடப்பட்டது. தேசிய தலைவர்கள் பலரும் வந்து வாழ்த்தினர்.

இந்நிலையில் கருணாநிதியின் 94வது பிறந்தநாளையொட்டி ஒரு மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார் சிவக்குமார். அதாவது 14.11.1988 அன்று சிவக்குமார் தான் வரைந்த ஓவியங்களை கருணாநிதியிடம் வழங்கியிருக்கிறார். சிவக்குமாரின் ஓவிய திறனை மனம் திறந்து பாராட்டியிருக்கிறார் கருணாநிதி. இந்த நிகழ்வை இப்போது நெகிழ்ந்து அந்த புகைப்படங்களையும் நம்மோடு பகிர்ந்துள்ளார்.

கூடவே கருணாநிதியின் உருவத்தையும் (புன்னகை கூட மாறாமல்) அச்சு அசலாக வரைந்து அசத்தியிருக்கிறார் சிவக்குமார். மேலே நீங்கள் காணும் படங்கள் அனைத்தும் சிவக்குமார் பகிர்ந்தது.

1496663209 1496663221 1496663236 1496663251 1496663261

Comments

comments