0

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் நாள் சுமாராக போனாலும் நேற்றைய இரண்டாவது நாளில் கொஞ்சம் சூடுபிடித்தது. இதில் கலந்து கொண்ட 15 பேர்களில் பாடலாசிரியர் சினேகன் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் 15 பேர்களில் ஒருவரை வெளியேற்றும் நாமினேஷன் நடைபெறவுள்ளதாம்.  இதுகுறித்து வெளியான விளம்பர வீடியோ ஒன்றில் ஜூலியை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று நிகழ்ச்சியில் பங்குபெரும் பெரும்பாலானோர் கூறி வருகின்றனர். ஜூலையை அடுத்து நடிகை அனுயா வெளியேற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஜல்லிக்கட்டு போராளி ஜூலி வெளியேற்றப்படக்கூடாது என்பதே இந்த நிகழ்ச்சியை பார்த்து வரும் ஒவ்வொருவரின் மனநிலையாக இருக்கின்றது. அதையும் மீறி ஜூலி வெளியேற்றப்பட்டால் நிகழ்ச்சி நெகட்டிவாக திரும்பவும் வாய்ப்பு உள்ளது என்பது சமூக வலைத்தள பதிவுகளில் இருந்து தெரியவருகிறது. எனவே நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்லும் ஜூலியை வெளியேற்ற மாட்டார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நாமினேஷன்னா என்னன்னு கஞ்சா கருப்பு அப்பாவித்தனமாக கேள்வி கேட்டது அவரது வெள்ளேந்திய மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments