NTLRG_20170624122605737051

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸும், கலைப்புலி எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க, சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம்- ‘வேலையில்லா பட்டதாரி-2′. தனுஷுடன் காஜோல், அமலா பால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் முதலானோர் நடிக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைத்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகவிருக்கும் ‘விஐபி-2′ படத்தை தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். கபாலி படத்தை வாங்கி நஷ்டப்பட்ட விநியோககஸ்தர்கள், தங்களுக்கு உரிய இழப்பீடு கொடுத்தால் தான் ‘விஐபி-2′ படத்தை வெளியிட அனுமதிப்போம், இல்லை என்றால் ரெட் கார்டு போடுவோம் என்று கலைப்புலி தாணுவிடம் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் செவிசாய்க்காவிட்டால், ‘வேலையில்லா பட்டதாரி -2′ வெளிவருவதில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியிருக்கிறது.

Comments

comments