0

தமிழில் கமல்ஹாசன் முதல் முறையாக டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக களமிறங்கியிருக்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி கடந்த 25ம் தேதி முதல் ஆரம்பமானது. பூட்டப்பட்ட ஒரு வீட்டிற்குள் 15 பிரபலங்கள் 100 நாட்கள் எப்படி தங்கியிருக்கிறார்கள் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் கரு. தமிழில் ஆரம்பமானபோதே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டிருக்கும் 15 பேரும் பிரபலமில்லாதவர்களே என்ற குரல் எழுந்தது. 14 பேர் மட்டும் என சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் 15 வது நபராக நமீதாவைச் சேர்த்ததும் எதற்கு என்று தெரியவில்லை.

நிகழ்ச்சி ஆரம்பமாகி 3 நாட்கள்தான் ஆகிறது. இன்றிலிருந்துதான் ஒருவருக்குள் கருத்து மோதல்கள், சண்டை சச்சரவுகள் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. வார இறுதி நாட்களில் மட்டும் கமல்ஹாசன் வந்து ஒவ்வொரு வாரமும் யார் வெளியேற்றப்படுகிறார் என்பது பற்றிய அலசல்களை நடத்துவார். கமல்ஹாசனின் முதல் டிவி நிகழ்ச்சி ஆஹா, ஓகோவென பேசப்படவில்லை. நாடகத்தனத்துடன் அவர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் என்று விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள். எதிர்பார்த்த அளவிற்கு இப்போதைக்கு இந்த நிகழ்ச்சி இல்லை என்பதே பலரின் கருத்து.

இந்தக் கருத்துக்கள் தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் தொகுத்து வழங்க இருக்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலும் எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டதாம். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரபலங்களை அழைத்தால் யாருமே வர விரும்பவில்லையாம். எப்படி பிரபலங்களை அழைத்து வருவது என திண்டாடிக் கொண்டிருக்கிறார்களாம். மேலும், தமிழில் எதிர்பார்த்த அளவு பரபரப்பை ஏற்படுத்தாமல் இருப்பதால், தெலுங்கிலும் அப்படியே வந்து விடுமோ என கலங்கிப் போய் இருக்கிறார்களாம்.

ஜுனியர் என்டிஆருக்கென்று இருக்கும் தனி ‘மாஸ்’ இந்த நிகழ்ச்சியின் மூலம் கெட்டுவிடக் கூடாது என அவருடைய ரசிகர்கள் கடுப்பில் இருப்பதாகத் தகவல்.

Comments

comments