0

சென்னை: தமிழக அரசியலில் நாளுக்கு ஒரு திருப்பம் ஏற்பட்டு கொண்டு இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த எம்.எல்.ஏ., சரவணன் பேசியதாக கூறப்படும் வீடியோ, கூவத்துார் பேரத்தை அம்பலப்படுத்தி உள்ளது.
இத்துடன், முதல்வர் இடைப்பாடி பழனிசாமி அணியில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் ஒருவர் பின் ஒருவராக தினகரனை சந்தித்து வருகின்றனர். அதே நேரத்தில், வீடியோ பேர ஆதாரங்கள் அடங்கிய சி.டி.,யுடன் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.

இப்படி பல நிகழ்வுகள் அடுத்தடுத்து நடந்து வருவதால், தற்போதைய அரசு நீடிக்குமா அல்லது வேறு புதிய திருப்பம் ஏற்படுமா என்ற குழப்பம் உருவாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, தி.மு.க., – காங்., கூட்டணியில், 98 ; முதல்வர் இடைப்பாடி பழனிசாமி அணியில், 97; தினகரன் அணியில்,26; ஓ.பன்னீர்செல்வம் அணியில், 12 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இந்த கணக்கு எப்படி மாறப் போகிறது என்பது தான் பெரிய கேள்வியாக உள்ளது.

 

Comments

comments