இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி தினகரன், கடந்த சில வாரங்களுக்கு முன் ஜாமீனில் வெளியேவந்தார். சிறை செல்வதற்கு முன், கட்சியிலிருந்து விலகுகிறேன் என்று சொல்லியவர், சிறையிலிருந்து வெளிவந்தவுடன், கட்சிப் பணிகளைக் கவனிப்பேன் என்றார். இதனால், அ.தி.மு.க.வில் குழப்பம் அதிகரித்தது.

TTV Dinakaran

இதனால் மீண்டும் அரசியல் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலுள்ள சசிகலாவை, தினகரன் சந்தித்துள்ளார். திகார் சிறையிலிருந்து வெளியேவந்த தினகரன், சசிகலாவைச் சந்திப்பது இது இரண்டாவது முறையாகும். குறிப்பாக, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்குப் பேரம் பேசப்பட்டதாக வீடியோ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு அ.தி.மு.க-வில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தச் சந்திப்பின்போது ஆட்சிக்கு எடப்பாடி, கட்சிக்கு டி.டி.வி என்று சசிகலாவிடம் வலியுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Comments

comments