1_12411

இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கபாலி படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினி – ரஞ்சித் கூட்டணி இணைந்துள்ள படம் காலா. இதன் படப்பிடிப்புகள் கடந்த இரண்டு வாரங்களாக மும்பையில் நடந்து வந்தது. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு ஆரம்பித்த நாள் முதலே காலா தொடர்பான படங்கள் இணையதளங்களில் வைராக பரவின.

இந்நிலையில் மும்பையில் காலா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பினார் ரஜினி. அப்போது சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, “மும்பையில் நடந்த முதற்கட்ட காலா படப்பிடிப்பு சூப்பர், ஜூன் 24ம் தேதி முதல், காலா படத்தின் 2வது கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். அடுத்த 2 மாதத்தில் ரசிகர்களை மீண்டும் சந்திப்பேன்”. என்றார்.

ரஜினி காலா படத்தை தொடங்கும் முன்னர் 15 மாவட்ட ரஜினி ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்து கொண்டார். அப்போது அவர் ரசிகர்களிடம் பேசும்போது, “போர் வரும்போது பார்த்து கொள்ளுவோம், அதுவரை அமைதியாக இருங்கள், போருக்கு தயாராகுங்கள்” என தனது அரசியல் பற்றி மறைமுகமாக ரசிகர்களுக்கு தெரிவித்தார். ரஜினியின் இந்த அரசியல் பேச்சு, மாநிலம் முதல் தேசியம் வரை பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments

comments