aluma

அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தில் இடம்பெற்ற பாடல் ‘ஆளுமா டோலுமா’. இந்தப்பாடலுக்கு அர்த்தமே புரியாவிட்டாலும் அனிருத் இசையில் உருவான அந்த பாடல் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் கலக்கியது. அஜித் ரசிகர்களின் முக்கிய விருப்ப பாடல் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. அப்பாடலின் ஹிட்டு தான் அடுத்தபடியாக அஜித் நடித்து வரும் விவேகம் படத்திற்கும் அனிருத் இசையமைக்க முக்கிய காரணமாகியது.

அப்படி அஜித் ரசிகர்களுக்கு மிக பிடித்தமான அந்த ‘ஆளுமா டோலுமா’ பாடல் தற்போது ஆங்கிலத்தில் வெளியாக உள்ளது. அந்த பாடலை ஆங்கிலத்தில் எழுதி பாடி வெளியிடுகிறார் இங்கிலாந்து பாடகர் இன்னோ கெங்கா. இவர் ஒரு பாப் இசை பாடகர். யு-டியூப்பின் பிரபலமான இவர், இதற்கு முன்பு பல பாப் பாடல்கள் மற்றும் ஆல்பங்களை வெளியிட்டு யுடியூப் ரசிகர்களின் பிரியத்தை பெற்றவர். இவர் அஜித்தின் வேதாளம் பட பாடலை ஆங்கிலத்தில் பாடி வெளியிடும் தகவல் வெளியானதில் இருந்து அஜித் ரசிகர்கள் செம உற்சாகமடைந்துள்ளனர்.

 

Comments

comments