collage-647_061017114444

சென்னை: அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களிடம் பண பேரம் நடந்ததாக வெளியான செய்தி குறித்து, சி.பி.ஐ., விசாரணை கோரி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவுக்கு, முதல்வர் பழனிசாமி தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. விசாரணையை, வரும், 23க்கு உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

முதல்வர் பழனிசாமி அரசு மீது, சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர் மானம் கொண்டு வரப்பட்டது. ரகசிய ஓட்டெடுப்பு நடத்தக் கோரி, தி.மு.க., சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதை ஏற்காததால், தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் ரகளை செய்தனர். இதையடுத்து, அவர்கள் வெளியேற்றப்பட்டனர். பின், தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது. அதில், நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றது.
இந்த, ‘நம்பிக்கை ஓட்டெடுப்பு செல்லாது’ என, அறிவிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க.,வை சேர்ந்த, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார்.
மனுவை, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ விசாரிக்கிறது. அடுத்த கட்ட விசாரணை, ஜூலை, 11க்கு தள்ளிவைக்கப்
படடுள்ளது.
இதற்கிடையில், ‘நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களுக்கு கோடிக்கணக்கில் பேரம் நடந்தது’ என, மதுரை தெற்கு தொகுதி அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., சரவணன் கூறியதாக, தனியார், ‘டிவி’க்களில் செய்தி வெளியானது; இந்த செய்தியை, சரவணன் மறுத்தார்.
இதையடுத்து, ஸ்டாலின் தரப்பில் கூடுதலாக தாக்கல் செய்த மனுவில், ‘அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களிடம் பண பேரம் நடந்ததாக வெளியான செய்தி குறித்து, சி.பி.ஐ., மற்றும் வருவாய் புலனாய்வு துறை விசாரிக்க வேண்டும். எனவே, இந்த இரண்டு துறைகளையும், வழக்கில் சேர்க்க வேண்டும்’ என, கூறப்பட்டது.
மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.சுந்தர் அடங்கிய, ‘டிவிஷன் பெஞ்ச்’ முன், நேற்று விசாரணைக்கு வந்தது. ஸ்டாலின் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள்
சண்முக சுந்தரம், விடுதலை
ஆஜராகினர்.
சி.பி.ஐ., மற்றும் வருவாய் புலனாய்வு துறை பதிலளிக்க, ‘நோட்டீஸ்’ அனுப்புவது குறித்து,
நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
அப்போது, முதல்வர் பழனிசாமி சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ”இந்த இடைக்கால மனு விசாரணைக்கு உகந்தது அல்ல; பிரதான வழக்கின் வரம்பை மீறுவதாக, இடைக்கால மனு உள்ளது; எனவே, இதற்கு பதிலளிக்க அவகாசம் வேண்டும்,” என்றார். இதையடுத்து, விசாரணையை, வரும், 23க்கு டிவிஷன் பெஞ்ச் தள்ளிவைத்தது.

 

Comments

comments