_18494 (1)

தற்போதைக்கு அரசியல் பற்றி பேச விரும்பவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னை போயஸ்கார்டனில் இன்று செய்தியாளர்கள் ரஜினியிடம், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பண பேரம் நடந்ததாக எம்.எல்.ஏ சரவணன் பேசியதாக வெளியான வீடியோ குறித்த கேள்வியை எழுப்பினர்.

அதற்குப் பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறிய ரஜினி, தற்போதைக்கு அரசியல் பற்றி பேச விரும்பவில்லை என்றார்.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை அன்று தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். நதிகள் இணைப்புக்காக ரஜினி ரூ.1 கோடி தருவதாக அய்யாக்கண்ணுவிடம் உறுதி அளித்தார்.

ரஜினியை அரசியலுக்கு கொண்டுவர தீவிர முயற்சி மேற்கொண்டுள்ள பாஜக, அவரை முன்னிறுத்துவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது. விவ சாயிகள் பிரச்சினை உள்ளிட்ட முக் கியப் பிரச்சினைகளுக்கு ரஜினி காந்த் மூலம் தீர்வு காண மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற் காகவே அய்யாக்கண்ணு போன் றவர்களுடனான சந்திப்புகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் ரஜினியை சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

திருமாவளவன் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று வெளிப்படையாக வரவேற்பதுடன், மிகப் பெரிய மாற்று சக்தியாக ரஜினி இருப்பார் என்றும் கூறி வருகிறார்.

இந்நிலையில் தற்போதைக்கு அரசியல் பற்றி பேச விரும்பவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது அவரின் அரசியல் வியூகமாகவே இருக்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது.

Comments

comments