_18494 (1)

ரஜினி அரசியலுக்கு வருவதைக் குறித்து நகைச்சுவை நடிகர் செந்தில் தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது. ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற குழப்பம் பல காலமாய் மக்களின் மனதில் இருந்து கொண்டிருந்தது. அதை மேலும் தீவிரமாக்கும் விதமாக அவரது சமீபத்திய செயல்பாடுகள் இருக்கின்றன.

 

இந்த நிலையில் நகைச்சுவை நடிகரும், அதிமுகவின் தீவிர ஆதரவாளருமான செந்தில் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரனைச் சந்தித்துத் திரும்பியவர் பின் அவர் அளித்துள்ள பேட்டியில் “தமிழக அரசியலில் இப்போதிருக்கும் நிலைமை தொடர்ந்து நீடித்தால் ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார். ரஜினி அரசியலுக்கு வரட்டும். அதற்கு அவர் இந்தியர் என்பதே போதும். அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியை நடத்துவதுதான் இப்போதைய தேவை. பதவிகளைச் சிலரே வைத்துக்கொள்ளாமல் பிற எம்ஏல்ஏ க்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும்” என்று பேசினார்.

ரசிகர்களைச் சந்திப்பதும், போர் வரட்டும் என்று பொடி வைத்து பேசுவதும், எல்லாம் அவன் என்று மேலே கை காட்டுவதும் என அவருடைய செய்கைகள் அரசியலுக்கு வருவார் என்பதை ஓரளவுக்கு உறுதிபடுத்துவதாகவே இருக்கின்றன. தன்னுடைய அரசியல் சூழல் குறித்து, தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோரிடம் சில நாள்களுக்கு முன்பு தீவிரமாக விவாதித்தகாக, கூறப்பட்டது. மேலும், வருகிற ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திர தினத்தன்று புதிய கட்சியைத் தொடங்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில், அவருடைய பிறந்த நாளில் கட்சி உதயமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, 22 வருடங்களுக்கு முன்பே வெளியான முத்து திரைப்படத்தில் ரஜினி செந்திலிடம் “எப்போ வருவேன் எப்படி வருவேனு யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்தில கரெக்டா வருவேனு” எனக் கூறிய டயலாக்கைத்தான் நினைவுப்படுத்துகிறது.

Comments

comments