413164-sellur-raja

சட்டசபையில், கூட்டுறவுத் துறை அமைச்சர், ராஜு பேசுகையில், தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள், ‘தெர்மாகோல்’ என, குரல் எழுப்பி, கிண்டலடித்தனர். மதுரை வைகை அணையில், நீர் ஆவியாவதை தடுக்க, அமைச்சர் ராஜு ஆலோசனைப்படி, அதிகாரிகள், ‘தெர்மாகோல்’ மிதக்க விட்டனர்; அவை, உடனே காற்றில் பறந்தன. இந்நிகழ்ச்சி கேலி கிண்டலுக்கு உள்ளானது.

தி.மு.க., கிண்டல் : அதை நினைவுப்படுத்தும் வகையில், சட்டசபையில் நேற்று, கூட்டுறவுத் துறை மானிய கோரிக்கையின் போது, அமைச்சர் ராஜு பதில் அளிக்க எழுந்த போது, தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள், ‘தெர்மாகோல்’ என, குரல் எழுப்பி கலாய்த்தனர்.
பின், தி.மு.க., உறுப்பினர் வேலுவின் குற்றச்சாட்டுகளுக்கு, அமைச்சர் நீண்ட விளக்கம் அளித்தபோது, எதிர்க்கட்சி துணைத் தலைவர், துரைமுருகன், ”நீங்கள் சுருக்கமாக முடிக்காவிட்டால், கிண்டல் செய்வேன்,” எனக்கூறி, வைகை அணையில், தெர்மாகோல் விட்டதையும், அவை பறந்ததையும், காகிதங்களை கையில் எடுத்து செய்து காண்பித்தார்.
அதைக்கண்ட சபாநாயகர் தனபால், ”எதிர்க்கட்சி துணைத் தலைவர், இப்படி செய்யலாமா…” என கேட்க, அவர் சிரித்தபடி அமர்ந்தார்.
நீண்ட விளக்கம்
எதிர்க்கட்சியினரின் கலாய்ப்பை கண்டு கொள்ளாமல், அமைச்சர் ராஜு வழக்கமான பாணியில், நீண்ட விளக்கம் அளித்தார்.
அவரை அமர வைக்க, அவர் அருகிலிருந்த அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி ஆகியோர், அவரது சட்டையை பிடித்து அவ்வப்போது இழுத்தனர்.
எதைப்பற்றியும் கவலைப்படாமல், நீண்ட விளக்கத்தை அளித்த பிறகே, அமைச்சர்
ராஜு இருக்கையில் அமர்ந்தார்.

Comments

comments