1_12411

சூர்யா நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடப்போவதாக பலமுறை அறிவித்த அப்படத்தின் டைரக்டர் விக்னேஷ்சிவன், சொன்னபடி வெளியிடாமல் சூர்யா ரசிகர்களை ரொம்பவே சோதித்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் பர்ஸ்ட் லுக் பற்றி அறிவிக்கும்போது ஆவலுடன் காத்திருப்பார்கள் சூர்யா ரசிகர்கள். ஆனால் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி வெளியிட மாட்டார் விக்னேஷ்சிவன். ஒருமுறை அப்படி சொன்னவர், சூர்யாவின் புகைப்படம் ஒன்றை மட்டும் வெளியிட்டார்.

இந்த நிலையில், தற்போது தானா சேர்ந்த கூட்டம் படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தந்தையர் தினமான நேற்று மீண்டும் பர்ஸ்ட் லுக் குறித்து தனது டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார் விக்னேஷ்சிவன். தானா சேர்ந்தகூட்டம் படம் தந்தை-மகன் உறவை மையப்படுத்திய கதையில் உருவாகியிருக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஜூலை மாதம் முதல் வாரத்தில் கண்டிப்பாக வெளியாகிறது என்று அன்பான சூர்யா ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

 

Comments

comments